< Back
மாநில செய்திகள்
வடபாதிமங்கலம், நான்கு பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

வடபாதிமங்கலம், நான்கு பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
27 May 2023 12:15 AM IST

வடபாதிமங்கலம், நான்கு பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:

வடபாதிமங்கலம், நான்கு பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நான்கு பிரிவு சாலை

கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம் பஸ் நிலையம் அருகில் கூத்தாநல்லூர் சாலை, வடபாதிமங்கலம் சாலை, உச்சுவாடி சாலை, தேரடித் தெரு சாலை என நான்கு பிரிவு சாலை உள்ளன. இந்த சாலைகள் வழியாக கூத்தாநல்லூர், திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், கொரடாச்சேரி, கும்பகோணம், மாவூர், எட்டுக்குடி மற்றும் ஏனைய ஊர்களுக்குச் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் உள்பட சென்று வருகின்றன.

விபத்துக்கள்

இந்த நிலையில், உச்சுவாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பஸ் நிலையம் மற்றும் பஸ் நிறுத்தங்கள் உள்ள இடங்களுக்கு சென்று வருவோர் மற்றும் கடைவீதி, வழிபாட்டு தலங்கள் மற்றும் ஏனைய இடங்களுக்கு சென்று வருவோர் இந்த நான்கு பிரிவு சாலையை கடந்துதான் சென்று வருகின்றனர்.

இந்த நான்கு பிரிவு சாலையிலும் செல்லும் வாகனங்கள் திடீரென திரும்புவதால் விபத்து ஏற்படுகிறது. மேலும், நான்கு பிரிவு சாலை உள்ள பகுதியில் ஆபத்தான வளைவுகள் உள்ளதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

வேகத்தடை அமைக்க வேண்டும்

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள், நான்கு பிரிவு சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான வளைவுகள் கொண்ட நான்கு பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்