< Back
மாநில செய்திகள்
மேலதூவல் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மேலதூவல் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

தினத்தந்தி
|
26 Jun 2023 12:15 AM IST

மேலதூவல் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள மேலதூவல் கிராமத்தில் காளியம்மன், பிள்ளையார், முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் களம் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்பட்டது. களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இதில் 15-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. ,இந்த போட்டியை காண முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க் கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்