< Back
மாநில செய்திகள்
காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

தினத்தந்தி
|
28 May 2023 12:00 AM IST

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காரையூர் காரை கண்மாயில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இருந்து மொத்தம் 13 காளைகள் கலந்து கொண்டன. 9 வீரர்கள் கொண்ட ஒரு குழு என மாடுபிடி வீரர்கள் 13 குழுக்களாக கலந்து கொண்டு விளையாடினர். இதில் 13 காளைகளில் 9 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினார். மேலும் 4 காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றது. 2 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்