< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டு
|29 May 2023 12:15 AM IST
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது
சிவகங்கை
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த காளைகள் மட்டுமில்லாமல் மதுரை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 12 காளைகளும் அதேபோல் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளை ஒன்றிற்கு 25 நிமிடம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 9 வீரர்கள் களம் கண்டனர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. வெற்றிபெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.