< Back
மாநில செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டு
விருதுநகர்
மாநில செய்திகள்

வடமாடு மஞ்சுவிரட்டு

தினத்தந்தி
|
26 May 2023 3:00 AM IST

வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் பங்கேற்றன

ஒரு காளைக்கு ஒரு குழு என போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரு குழுவிற்கு 9 வீரர்கள் 3 மாற்று வீரர்கள் என கலந்து கொண்டு காளைகளை அடங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை திரளான மக்கள் கண்டு களித்தனர். 9 பேர் காயம் அடைந்தனர். திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்