< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு
|22 April 2023 12:15 AM IST
தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் பங்கேற்றன.
இந்த காளைகளை அடக்க 117 வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் ஒவ்வொரு காளையும் வடத்தில் கொண்டு வரப்பட்டு 9 மாடுபிடி வீரர்கள் கொண்ட குழுவினர் அந்த காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.
சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டன. சில காளைகள் பிடிபடாமல் பரிசுகளை வென்றன. சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர்களாக ஏராளமானோர் கலந்துகொண்டனர்.