சிவகங்கை
வடமாடு மஞ்சுவிரட்டு
|அண்ணா பிறந்தநாளையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
காரைக்குடி
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக வடமாடு மஞ்சுவிரட்டு நேமம் அழகாபுரி விநாயகர் கோவில் அருகே உள்ள திடலில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வடமாடு மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். சாக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு முன்னிலை வகித்தனர்.
ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் துலாவூர் பார்த்திபன், சாக்கோட்டை வடக்கு ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வ பாண்டி ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாசான், மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் கோவிலூர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் தேவன், ஒன்றிய கவுன்சிலர் சையது அபுதாஹிர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.