< Back
மாநில செய்திகள்
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தடுப்பூசி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தடுப்பூசி

தினத்தந்தி
|
3 Jun 2022 11:20 PM IST

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, ராசு வீதியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும், 53 பேருக்கு தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு பொறுப்பாளர்கள் அக்பர் அலி, ஆஸம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் டாக்டர்கள் இனியள் மண்டோதரி, பர்சானா, கோவிந்தராஜ் செவிலியர்கள் தாசின்பானு, நஸ்ரின் பானு, கிராம சுகாதார செவிலியர்கள் ஆயிஷா பேகம், அல்தாபி மற்றும் அலுவலர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் மூளைக் காய்ச்சல், நிமோனியா நோய்களை தடுக்கும் ஊசியையும், ஓ.பி.வி., சொட்டுமருந்து உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். இதில் கவுன்சிலர்கள் பாலாஜி, தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்