< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில்3.31 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில்3.31 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

தினத்தந்தி
|
2 March 2023 12:30 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் 3-ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. புதுச்சத்திரம் அருகே உள்ள கரையான்புதூர் கிராமத்தில் கோமாரிநோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கோமாரி நோய் தடுப்பூசி முகாமானது 21 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,67,796 மாட்டினங்களுக்கும், 63,328 எருமை இனங்களுக்கும் என மொத்தம் 3,31,124 கால்நடைகளுக்கு 100 சதவீதம் முழுமையாக தடுப்பூசி செலுத்துவதற்காக இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் தடுப்பூசி பணியாளர்கள் 129 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

எனவே நாமக்கல் மாவட்ட விவசாயிகள் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது. எருமை ஆகிய கால்நடைகளை அந்தந்த கிராமங்களில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்குஅழைத்து சென்று தடுப்பூசியினை தவறாமல் போட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர், துணை இயக்குனர் மணிசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்