தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில்கிராமங்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்30 நாட்கள் நடக்கிறது
|தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தகுதியுள்ள 317700 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 27-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 30 நாட்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4 மாதத்திற்கு மேற்பட்ட சினையற்ற ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு குறிப்பிட்ட நாளில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வார்கள். எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் தங்கள் ஆடுகளை அந்தந்த கிராமங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு கொண்டு சென்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியினை தவறாமல் போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.