< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி
|9 Sept 2023 12:15 AM IST
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
திருவரங்குளம் அருகே உள்ள பூவரசகுடி ஊராட்சியை சேர்ந்த அழகம்பாள்புரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் உள்பட 3 பேரை வெறிநாய் கடித்தது. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை கடித்தது. இதையடுத்து, வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மேலும், கால்நடை மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு சிகிச்சை அளித்தனர்.