< Back
மாநில செய்திகள்
திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

தினத்தந்தி
|
28 Sept 2023 7:23 PM IST

திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி இன்று திருத்தணி கால்நடை மருந்தகத்தில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இது குறித்து திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் தாமோதரன் கூறுகையில், 'ஆண்டுதோறும், செப்டம்பர் 28-ந் தேதி உலக வெறிநோய் தடுப்பு தினம் ஆகும். இந்த தினத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திருத்தணி கால்நடை மருந்தகத்தில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஆகையால் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களது செல்லப்பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்' என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்