< Back
மாநில செய்திகள்
நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்
திருவாரூர்
மாநில செய்திகள்

நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்

தினத்தந்தி
|
29 Sept 2023 12:45 AM IST

திருத்துறைப்பூண்டியில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி ஆகியோரின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு இலவசமாக ரேபிஸ் நோய் தடுப்பூசி போடும் முகாம் நேற்று திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் நடந்தது. இதில் கால்நடை உதவி இயக்குனர் ராமலிங்கம் மற்றும் டாக்டர்கள் குழுவினர் 250-க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி போட்டனர். நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி ஆணையர் பிரதான் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்