< Back
மாநில செய்திகள்
கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்
கரூர்
மாநில செய்திகள்

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

தினத்தந்தி
|
10 Aug 2023 12:25 AM IST

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கடவூர் ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சியில் கால்நடைகளுக்கான பெரியம்மை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பி.உடையாபட்டி கால்நடை மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான பெரியம்மை தடுப்பூசி செலுத்தியதோடு, அதனை தடுப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். இதேபோல் செட்டியப்பட்டி, தெற்கு அய்யம்பாளையம், அண்ணா நகர், கன்னிமார்பாளையம் ஆகிய பகுதிகளில் கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்