< Back
மாநில செய்திகள்
2 லட்சத்து 91 ஆயிரம் மாடுகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

2 லட்சத்து 91 ஆயிரம் மாடுகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம்

தினத்தந்தி
|
1 March 2023 9:40 PM IST

மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 91 ஆயிரம் மாடுகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பூசி பணி திட்டத்தில் காணை நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 700 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று முதல் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. மேலும் விடுபட்ட மாடுகளுக்கு 22-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த தடுப்பூசி செலுத்தும் முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த முகாம்களில் பசுக்கள், காளைகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக்குட்டிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். எனவே விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் தங்களுடைய பசுக்கள், காளைகள், எருமைகள் மற்றும் கன்றுக்குட்டிகளை முகாமுக்கு அழைத்து சென்று காணை நோய் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்