< Back
மாநில செய்திகள்
ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

தினத்தந்தி
|
15 July 2022 10:33 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்.

பர்கூர்

தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பாலேப்பள்ளி கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, ஆட்டுக்கொல்லி நோய்

தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினார். பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது

கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி வரை தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு தடுப்பூசி பணி போடும் நடைபெறுகிறது. இந்த நோய் ஆடு வளர்ப்போருக்கு அதிக அளவில் பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாகும்.

அறிகுறிகள்

இந்த நோய் எனப்படும் வகையைச் சார்ந்த ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்த நோய் தாக்கும் போது அதிக காய்ச்சல், சோர்ந்து தீனி உட்கொள்ளா தன்மை, மூக்கிலிருந்து சளி வடிந்து உறைந்து இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். பி.பி.ஆ.ர் நோய் வராமல் இருக்க ஆண்டுக்கு ஒருமுறை ஆடுகளுக்கும், குறிப்பாக 3 முதல் 6 மாத குட்டிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறுஅவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர்கள் மரியசுந்தரம், அருள்ராஜ், தாசில்தார் பன்னீர்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலையரசி கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெசிந்தா வில்லியம்ஸ், கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணகுமார், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்