< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்
|15 Oct 2023 12:21 AM IST
நாமக்கல்லில் செல்ல பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சை துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் செல்வராஜூ தொடங்கி வைத்தார். இதில் நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் நடராஜன், டாக்டர் சிவக்குமார், சிகிச்சை துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் தர்மசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 98 நாய்கள் மற்றும் 12 பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.