< Back
மாநில செய்திகள்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தினத்தந்தி
|
11 July 2023 2:00 AM IST

சுகாதார பணிகள் தொய்வு ஏற்படுவதால் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

தாயில்பட்டி,

சுகாதார பணிகள் தொய்வு ஏற்படுவதால் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

காலிப்பணியிடங்கள்

வெம்பக்கோட்டை பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் அந்தோணி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சிகள்) பிரின்ஸ் வரவேற்றார்.

வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் நீரேற்றும் ஆபரேட்டர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

நிதி ஒதுக்கீடு

ஆகையால் காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் தொடங்க இருப்பதால் ஊராட்சிகளில் சேதமடைந்த சாலையை சரி செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். டெண்டர் விடப்பட்ட பணிக்கு தேவையான அரசு நிதியை காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜல்ஜீவன் திட்டம் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்