விருதுநகர்
சமூக நல அலுவலகத்தில் பணியிடங்கள்
|சமூக நல அலுவலகத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு முதுகலைசமூகப்பணி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் 2 ஆண்டுகள் அனுபவம் அல்லது அதேஅமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் தேவை. வாரம் முழுவதும் சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 35 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சமையல் தெரிந்திருக்க வேண்டும். 35 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வாரம் முழுவதும் பணிபுரிய சம்மதிக்கும் நபர் மட்டுமே விண்ணப்பிக்கலாம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி விண்ணப்பங்களை வருகிற 12-ந் தேதிக்குள் மாவட்ட சமூக அலுவலர், சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.