< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மருத்துவத்துறை காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்பப்படும்: அமைச்சர் பேட்டி
|1 Sept 2022 2:35 PM IST
மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்பப்படும் என மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருவாரூர்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, மருத்துவத்துறையில் நவம்பர் 15-க்குள் புதிதாக 4,038 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருந்து கடைகளில் தனி நபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர், எலி பேஸ்ட் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.