< Back
மாநில செய்திகள்
நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தினத்தந்தி
|
29 Jan 2023 7:30 PM GMT

நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்று முத்தரசன் தலைமையில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி வக்கீல்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வக்கீல்கள் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில வக்கீல்கள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாரதி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, சிவபுண்ணியம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து.உத்திராபதி, கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் பாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வக்கீல் பிரிவு மாநில மாநாட்டை, மதுரையில் வருகிற மே மாதம் நடத்துவது. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்ற அறிவிப்பை வரவேற்பது.

நிரப்ப வேண்டும்

இதேபோன்று மாநில ஐகோர்ட்டுகளில், அந்தந்த மாநில மொழியில் வழக்காடுவதையும், தீர்ப்புகள் எழுதப்படுவதையும் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும், நீதிபதிகள், நடுவர்களை நியமனம் செய்யாமல் ஏறத்தாழ பாதி நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தீர்வுக்கு வராமலேயே நிலுவையில் உள்ளன. எனவே அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

தற்காலிக கட்டிடங்களில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டிடங்களை உடனடியாக கட்ட வேண்டும். போதிய அளவில் வக்கீல் அலுவலகங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட வேண்டும். நியாயமாக வக்கீல் பணி செய்யும் வழக்கறிஞர்களுக்கு. சமூக விரோத சக்திகளால்

மிரட்டல் விடுப்பது, அச்சுறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணித்து, உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அரசுஅலுவலகங்களில் நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்