< Back
மாநில செய்திகள்
வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கரூர்
மாநில செய்திகள்

வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
5 Sept 2023 11:53 PM IST

152-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்று கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான சின்னசாமி ஆகியோர் தலைமையில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, மாவட்ட இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், கரூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பசுவை சிவசாமி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலகண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் மதுசூதனன், எம்.ஆர்.கே.செல்வகுமார், கலையரசன், வி.சி.கே.பாலகிருஷ்ணன், கடவூர் ரமேஷ், பகுதி செயலாளர்கள் சேரன் பழனிச்சாமி, சக்திவேல், சுரேஷ், ஆண்டாள் தினேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்ட வ.உ.சி. பேரவை சார்பில் தலைவர் மணீஷ் மகேஸ்வரன் தலைமையில் தாந்தோன்றிமலையில் உள்ள வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செயலாளர் பசுபதி, அமைப்பாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது வ.உ.சிதம்பரனார் புகழ் ஓங்குக... என அனைவரும் கோஷம் எழுப்பினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாலை அணிவித்து மரியாதை

இதேபோல் கரூர் மாவட்ட சோழிய வெள்ளாளர் சமூக நல சங்கம் சார்பில் செயல் தலைவர் சிவசாமி தலைமையில் வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர தலைவர் பெரியசாமி, பொருளாளர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதுபோல் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் தெற்கு நகர செயலாளர் அர்ச்சுணன் தலைமையிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையிலும் வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்