< Back
மாநில செய்திகள்
வரத்து அதிகரிப்பால்முருங்கைக்காய் விலை கிலோ ரூ.5 குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.95-க்கு விற்பனை
தர்மபுரி
மாநில செய்திகள்

வரத்து அதிகரிப்பால்முருங்கைக்காய் விலை கிலோ ரூ.5 குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.95-க்கு விற்பனை

தினத்தந்தி
|
20 Oct 2023 12:30 AM IST

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முருங்கைகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல் வீடுகளிலும் முருங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தர்மபுரி உழவர் சந்தைக்கு கடந்த வாரத்தில் முருங்கைக்காய் வரத்து குறைந்தது. இதனால் விலை உயர்ந்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று சந்தைக்கு வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ரூ.100-க்கு விற்பனையான முருங்கைக்காய் நேற்று கிலோவிற்கு ரூ.5 குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.95 -க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்