< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உதகை மலை ரெயில் சேவை 18 -ம் தேதி வரை ரத்து
|16 Nov 2023 9:31 PM IST
மண்சரிவால் உதகை மலை ரெயிலின் பாதை சேதம் அடைந்துள்ளது.
உதகை,
கோவை மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை வரும் 18ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மண்சரிவால் ரெயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கப்படாததால் 18ஆம் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், மலை ரெயில் பாதையில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. மலை ரெயில் பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி, ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் தொடர் பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 18ஆம் தேதி வரை உதகை மலை ரெயில் சேவை நிறுத்திவைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.