< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உதகை மலை ரெயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பின் மீண்டும் துவக்கம்
|12 Jan 2024 9:38 AM IST
150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகையை நோக்கி மலை ரெயில் புறப்பட்டது.
உதகை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயில் பாதை அடர் வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ள நிலையில் இந்த ரெயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கனமழை எச்சரிக்கை மற்றும் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்ட காரணத்தால் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட உதகை மலை ரெயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் துவங்கியது. இதையடுத்து, 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகையை நோக்கி மலை ரெயில் புறப்பட்டது.