< Back
மாநில செய்திகள்
உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில்  இன்று மின்சாரம் நிறுத்தம்
மதுரை
மாநில செய்திகள்

உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
14 Jun 2022 1:32 AM IST

உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி

உசிலம்பட்டி துணை மின்நிலையம், தும்மக்குண்டு துணை மின்நிலையம், இடையப்பட்டி துணை மின்நிலையம், மொண்டிக்குண்டு துணை மின்நிலையம், டி.கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையம், எழுமலை துணை மின்நிலையம் பகுதியில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே கீழ்கண்ட பகுதியில் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அது பற்றிய விவரம் வருமாறு:-

உசிலம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி நகர், கவுண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையான்பட்டி, நல்லதேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, கீரிப்பட்டி, மேக்கிழார்பட்டி, பண்ணைபட்டி, ஒத்தப்பட்டி, சடையால், கன்னியம்பட்டி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

தும்மக்குண்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பட்டி, பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையம்பட்டி, வலங்ககுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

எழுமலை

இடையபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மாதரை, தொட்டப்ப நாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிப்பட்டி, செட்டியபட்டி, வில்லாணி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

மொண்டிக்குண்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளை மலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பாநாயக்கனூர், புதுக்கோட்டை, துரைச்சாமிபுரம் புதூர் ஆகிய பகுதிகள்.

டி.கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வாழைத்தோப்பு பீடர், கிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும், எழுமலை துணை மின் நிலையம் உட்பட்ட உத்தபுரம் பீடரில் ஜோதி நாயக்கனூர், உத்தப்புரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அழகு மணிமாறன் தெரிவித்துள்ளார்.

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. எனவே கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வெ.புதூர், காடம்பட்டி, அய்யாபட்டி, ஓட்டக்கோவில்பட்டி, மங்களாம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்