< Back
மாநில செய்திகள்
தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்
அரியலூர்
மாநில செய்திகள்

தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
28 Jun 2022 12:00 AM IST

தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியில் தையற்கலை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மீன்சுருட்டி கிளைத் தலைவர் ராஜா பெரியசாமி தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் அருள், ராமச்சந்திரன், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் பாண்டியன் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். 40 வயது கடந்து கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நல வாரியத்தின் மூலம் தரமான விழி லென்ஸ் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தையலுக்கு தேவையான நூல் பட்டன் கேன்வாஸ் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்திருப்பதை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். 60 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்