< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
|9 March 2023 1:00 AM IST
கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் பெரம்பலூர் நகர செயலாளர் பிரபு போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூர் அருகே ஆலம்பாடி சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த எங்கள் கட்சியின் கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் கம்பத்தில் இருந்த கட்சி கொடியையும் அகற்றியுள்ளனர். கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்று கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி இது தொடர்பாக பெரம்பலூர் போலீசாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார்.