< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டத்தை விரைந்து தொடங்க வலியுறுத்தல்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டத்தை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
7 Aug 2022 12:57 AM IST

பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டத்தை விரைந்து தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மருதமுத்து கூட்ட அறிக்கையை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ஆதிசிவம் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். மத்திய அரசு வழங்கியதுபோல் தமிழக அரசும் தங்களது ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.2022 முதல் 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். 70 வயது முடிவடைந்து ஓய்வூதியம் பெறுவோருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் ஆய்வக நுட்புனர்கள் கிரேடு 2 பதவியில் பணி மூப்பு அடிப்படையில் உரிய பதவி உயர்வு, மாறுதல் வழங்கிட அரசு விதிமுறைகளை தளர்த்த வேண்டும். மேலும் கொரோனா காலத்தில் மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வக நுட்புனர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செல்வம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்