பெரம்பலூர்
பெரம்பலூரில் அரசு சட்ட கல்லூரி தொடங்க வலியுறுத்தல்
|பெரம்பலூரில் அரசு சட்ட கல்லூரி தொடங்க வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்க கூட்டம் மாநில துணைத்தலைவரும், முன்னாள் ராணுவ அலுவலருமான பெரியசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில், பெரம்பலூரில் அரசு சட்ட கல்லூரி தொடங்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பந்தட்டை, அம்மாபாளையம், கொளக்காநத்தம் மற்றும் அகரம்சீகூர் ஆகிய பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்க வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். பெரம்பலூரில் அரசு கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கவும், விசுவக்குடியில் உள்ள நீர்த்தேக்கத்தில் படகு சவாரி தொடங்கவும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.