< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு - ஏராளமான இளைஞர்கள் தேர்வில் பங்கேற்பு
|5 Jun 2022 1:47 PM IST
தமிழகத்தில் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.
சென்னை,
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு, நாடு முழுவதும் 75 இடங்களில் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.
காலை, மாலை என இரண்டரை மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது. கடுமையான சோதனைக்கு பிறகே தேர்வர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.