< Back
மாநில செய்திகள்
உப்புக்கோட்டை பகுதியில்மிளகாய் விளைச்சல் அமோகம் :விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி
மாநில செய்திகள்

உப்புக்கோட்டை பகுதியில்மிளகாய் விளைச்சல் அமோகம் :விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
28 Dec 2022 6:45 PM GMT

உப்புக்கோட்டை பகுதியில் மிளகாய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன் பட்டி, உப்புக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முட்டைகோஸ், பீட்ரூட், தக்காளி முள்ளங்கி, கத்தரிக்காய், வெங்காயம், கொத்தமல்லி என அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. வருடத்தின் அனைத்து பருவத்திலும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுவதே இப்பகுதியின் சிறப்பம்சம் ஆகும்.

முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் விளைச்சலடையும் இப்பகுதி காய்கறிகள் திறட்சி மற்றும் சுவையாக இருக்கும். இதனால் வெளிமாவட்டம் மற்றும் கர்நாடகா கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் கடைமடை பகுதி காய்கறிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. தற்போது கடைமடை பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது. போதிய பாசன வசதி மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் மிளகாய் நன்றாக விளைச்சல் அடைந்து உள்ளது.

தற்போது மிளகாய்கள் பறிக்கப்பட்டு தரம் பிரித்து விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதே நேரம் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் தற்போது ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மிளகாய் சாகுபடி செய்த கடைமடை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்