< Back
மாநில செய்திகள்
விண்ணப்பங்களை செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

விண்ணப்பங்களை செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சி

தினத்தந்தி
|
15 July 2023 7:15 PM GMT

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்களை செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது. பயிற்சியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.அப்போது கலெக்டர் கூறியதாவது:-மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 429 ரேஷன் கடைகள் உள்ளன. அதில் மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இத்திட்டத்தில் முதல் கட்டமாக, டோக்கன் முறையில் 209 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2-ம் கட்டமாக டோக்கன் முறையில் 220 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. மாவட்டம், வட்டம், மண்டலம் என கண்காணிப்பு அலுவலர்கள் 135 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் முகாம் தன்னார்வலர்கள் 755 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.பயிற்சியில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, தாசில்தார்கள் மகேந்திரன், குத்தாலம் இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைப்போல மங்கைநல்லூர், உளுத்துக்குப்பை, மொழையூர் ஆகிய இடங்களில் நடந்த பயிற்சி முகாம்களையும் கலெக்டர் நேரில பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்