கரூர்
உப்புப்பாளையம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
|உப்புப்பாளையம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றத.
புன்னம்சத்திரம் அருகே உப்புப்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 15-ந்தேதி வரை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வந்தது. கடந்த 16-ந்தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். 17-ந்தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று முன்தினம் மாரியம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரயங்களால் அபிஷேகம் நடந்தது. அன்று மாலை உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. இரவு எருமை, கிடாய் வெட்டு பூஜை நடந்தது. நேற்று கம்பம் பிடுங்கி கிணற்றில் விடுதல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.