< Back
மாநில செய்திகள்
தரம் உயர்த்தப்பட்ட புதிய மின்மாற்றி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட புதிய மின்மாற்றி

தினத்தந்தி
|
16 Aug 2022 10:45 PM IST

உளுந்தூர்பேட்டையில் தரம் உயர்த்தப்பட்ட புதிய மின்மாற்றி மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில் உள்ள பழைய மின்மாற்றியை தரம் உயர்த்தி புதிய மின்மாற்றியை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து புதிய மின்மாற்றியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை இயக்கி வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். அப்போது மின்வாரிய செயற்பொறியாளர்கள் சர்தார், சுப்புராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சிவராமன், கோபிநாத், உதவி பொறியாளர் எழிலரசன், பிரசாத் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்