< Back
மாநில செய்திகள்
கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா ரெயில் சேவை - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா ரெயில் சேவை - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

தினத்தந்தி
|
10 Nov 2023 9:39 PM IST

நாளை முதல் 14-ந்தேதி வரை முன்பதிவில்லா ரெயில் சேவை இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை,

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வெளியூர்களில் வேலை செய்பவர்கள் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் கோவை-திண்டுக்கல் இடையே நாளை முதல் 14-ந்தேதி வரை முன்பதிவில்லா ரெயில் சேவை இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி கோவையில் காலை 9 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில், மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். அதே போல் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்