< Back
மாநில செய்திகள்
தாம்பரம்-தன்பாத் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தாம்பரம்-தன்பாத் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
28 Jun 2023 1:32 AM IST

தாம்பரம்-தன்பாத் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக வரும் 30-ந்தேதி தாம்பரத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திற்கு இரவு 10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்.06077) புறப்படும். இந்த ரெயில் ஜூலை 3-ந்தேதி காலை 5.30 மணிக்கு தன்பாத் சென்றடையும்.

மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து ஜூலை 4-ந்தேதி மதியம் 3.35 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்.06078) புறப்பட்டு 6-ந்தேதி இரவு 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில், எழும்பூர், சூலூர்பேட்டை, நெல்லூர், குண்டூர், ஜபல்பூர் உள்ளிட்ட 23 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்