< Back
மாநில செய்திகள்
ஆளில்லா கடை திறப்பு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஆளில்லா கடை திறப்பு

தினத்தந்தி
|
2 Oct 2023 8:19 PM GMT

24-வது ஆண்டாக காந்தி பிறந்தநாளில் மட்டும் பாபநாசத்தில் ஆளில்லா கடை திறக்கப்பட்டது. முதல் விற்பனையை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தொடங்கி வைத்தார்.

24-வது ஆண்டாக காந்தி பிறந்தநாளில் மட்டும் பாபநாசத்தில் ஆளில்லா கடை திறக்கப்பட்டது. முதல் விற்பனையை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தொடங்கி வைத்தார்.

நேர்மையை கடைபிடிக்க வேண்டும்

காந்தி நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவர் கண்ட கனவினை நினைவாக்கிட, ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி பிறந்த நாளில், நேர்மை குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் 24 ஆண்டுகளாக பாபநாசத்தில் ஆளில்லா கடை திறக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இந்த ஆளில்லா கடை ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது.

இந்த கடையி்ல் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள் உள்ளன. அந்தந்த பொருட்களில் விலை குறிப்பிடப்பட்டிருக்கும். பொருளை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை டப்பாவில் வைக்க வேண்டும். இந்த கடையில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் உள்ளன. லாபம் நோக்கம் கிடையாது. நேர்மை மட்டுமே நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் விற்பனையாகும் தொகை சேவை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆளில்லா கடை திறப்பு

பாபநாசம் பழைய பஸ் நிறுத்தத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆளில்லா கடை நேற்று திறக்கப்பட்டது.

இந்த கடையில் வீட்டு உபயோகப்பொருட்கள், எழுதுபொருட்கள், திண்பண்டங்கள் ஆகியவை அதன் விலை அச்சிடப்பட்டு இருந்தது. அதன் அருகே ஒரு டப்பா வைக்கப்பட்டிருந்தது. இதில் பொருளை எடுத்துக்கொண்டு அதற்குரிய தொகையை டப்பாவில் வைத்தனர். அதே போல் பணத்தை வைத்துவிட்டு சரியான சில்லறையையும் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் வெங்கடேசன், முன்னாள் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ரமேஷ்பாபு கலந்துகொண்டு ஆளில்லாத கடையை திறந்து வைத்து பேசினார்.

தொடர்ந்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதில் பாபநாசம் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னாள் தலைவர் பக்ருதீன் அலிஅகமது தொகுத்து வழங்கினார். முடிவில் செயலாளர் பாபநாசம் ரோட்டரி சங்க செயலாளர் வக்கீல் முருகவேல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்