< Back
மாநில செய்திகள்
சாலையில் எரியாத மின் விளக்குகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சாலையில் எரியாத மின் விளக்குகள்

தினத்தந்தி
|
29 April 2023 1:21 AM IST

சாலையில் மின் விளக்குகள் எரியாத நிலையில் இருந்தன.

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டையில் போலீஸ் நிலையம் முதல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வரை தஞ்சை மற்றும் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் சுங்கச்சாவடி பராமரிப்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின் விளக்குகள் கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. இது குறித்து பல்வேறு தரப்பினரும் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை மின் விளக்குகள் சரி செய்யப்படவில்லை. இந்த சாலையில் கடைவீதி, போலீஸ் நிலையம், பஸ் நிலையம், அரசு அலுவலகங்கள், தனியார் வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த சாலையில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சில கடைகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. எனவே சாலையில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்