< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது - சசிகலா
|16 Sept 2024 4:54 AM IST
அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது பிறந்த ஊரான காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு சசிகலா வருகை தந்தார். பின்னர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்புகளையும் வழங்கினார்.
அதைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலா கூறியதாவது ,
"அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்க கூடிய பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு எப்படி செய்தோமோ அதேபோன்ற வழியில் செய்வேன். தி.மு.க. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது" என்றார்