< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
|17 Oct 2023 11:09 PM IST
கர்நாடக அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
புதிய பஸ் நிலையத்தின் முன்பு போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கோரிக்கைகள் தொடர்பாக கண்டன கோஷங்களை மறியலில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.