< Back
மாநில செய்திகள்
மிக்ஜம் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்வதற்காக மத்திய மந்திரி நாளை சென்னை வருகை
மாநில செய்திகள்

மிக்ஜம் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்வதற்காக மத்திய மந்திரி நாளை சென்னை வருகை

தினத்தந்தி
|
8 Dec 2023 11:48 PM IST

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார்.

சென்னை,

மிக்ஜம் புயலால் வட தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகள் அருகே உள்ள பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணி கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் 'மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம், சென்னையின் மேற்கு மாம்பலம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும் செய்திகள்