< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'மாமனிதன்' திரைப்படத்தைப் பார்த்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் - படக்குழுவுக்கு பாராட்டு
|18 Nov 2022 3:33 PM IST
‘மாமனிதன்’ படத்தைப் பார்த்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னை,
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'மாமனிதன்' திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் 'மாமனிதன்' படத்தின் சிறப்பு திரையிடல் காட்சியை மத்திய இணை மந்திரி எல்.முருகன், இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் பார்த்தனர். படத்தைப் பார்த்து இயக்குனரை வெகுவாக பாராட்டிய எல்.முருகன், படத்தின் பல இடங்களில் நெகிச்சி அடைந்ததாகவும், இப்படம் பெற்ற சர்வதேச விருதுகளுக்கும், மக்கள் தந்த வெற்றிக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.