மத்திய மந்திரி அமித்ஷா நாளை வேலூர் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
|வேலூரில் நடைபெறும் பா.ஜ.க. 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார்.
வேலூர்,
தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னை வந்த அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரியில் நாளை நடைபெறும் பா.ஜ.க. 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால் 25 பேர் கொண்ட எஸ்.டி.எஃப். படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் 150 பேர் அடங்கிய வெடிகுண்டு பரிசோதனை மற்றும் செயலிழப்பு குழுவினர் 15 குழுக்களாக பிரிந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்களைத் தவிர சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.