< Back
மாநில செய்திகள்
நாளை மறுதினம் தூத்துக்குடி செல்கிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
மாநில செய்திகள்

நாளை மறுதினம் தூத்துக்குடி செல்கிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

தினத்தந்தி
|
24 Dec 2023 8:30 AM IST

மழை பாதிப்பில் இருந்து நெல்லை தற்போது மீண்டுவரும் நிலையில், தூத்துக்குடியின் ஒருசில பகுதிகளில் மழைநீர் வடியாமல் இருக்கிறது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18-ந் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத அதி கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக, தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

மழை பாதிப்பில் இருந்து நெல்லை தற்போது மீண்டுவரும் நிலையில், தூத்துக்குடியின் ஒருசில பகுதிகளில் மழைநீர் வடியாமல் இருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பல பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செல்ல இருக்கிறார். அதன்படி, நாளை மறுதினம் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வார். மேலும் மழை வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யவுள்ளார்.

மேலும் செய்திகள்