< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
|25 April 2023 12:54 AM IST
வெம்பக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சத்தியவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) செல்வராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர் கூட்டங்களை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களின் குறைகளை தீர்க்க பேச வாய்ப்பு இல்லாமல் போகிறது என யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் தெரிவித்தார்.