< Back
மாநில செய்திகள்
சிங்கம்புணரி ஒன்றிய குழு கூட்டம்
சிவகங்கை
மாநில செய்திகள்

சிங்கம்புணரி ஒன்றிய குழு கூட்டம்

தினத்தந்தி
|
7 April 2023 6:45 PM GMT

சிங்கம்புணரியில் சாதாரண ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் சாதாரண ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு முன்னிலை வகித்தனர். வேளாண் வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். ரூ.21 லட்சத்துக்கான 16 தீர்மானங்களை அலுவலக மேலாளர் (பொறுப்பு) மகாலிங்கம் மன்ற பொருளாக வாசித்து, உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக முன் வைக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி, அன்புச்செழியன், ரம்யா செல்வகுமார், உமா சோனமுத்து, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரிய கருப்பிமுத்தன், இளங்குமார், சசிகுமார் மற்றும் அலுவலக பணியாளர்கள், உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் குமரேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்