< Back
மாநில செய்திகள்
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம்

தினத்தந்தி
|
19 May 2022 5:09 PM GMT

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஓம் சிவசக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக்அலிபேக், தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணைத்தலைவர் கோமதி நிர்மல்ராஜ் வரவேற்றார். அலுவலக உதவியாளர் அன்பு தீர்மானம் வாசித்தார். கூட்டத்தில் குடிநீர், சாலைவசதி, மின்விளக்கு, மயானகொட்டகை, கட்டிட பணிகள் மேற்கொள்வது மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் பணிகள் தேர்வு செய்வது, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்தல், புதிய சிமெண்ட் குடோன் கட்டிடம் கட்டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்