< Back
மாநில செய்திகள்
மத்திய பட்ஜெட்: தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மாநில செய்திகள்

மத்திய பட்ஜெட்: தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 July 2024 10:45 AM IST

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

மத்திய பட்ஜெட் தொடங்குவதற்கு முன்னதாக தமிழகத்தில் மெட்ரோ பணிகளுக்கு தேவையான நிதி மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என்றும், தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெறுகிறது.

சென்னையில் கவர்னர் மாளிகை அருகே தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் மயிலை பாலு, பிரபாகர ராஜா, துணை மேயர், நிர்வாகிகள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்