ஈரோடு
ஈரோடு மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்;அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
|ஈரோடு மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஈரோடு மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
தேர்தல் பணிமனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, ஈரோடு சூரியம்பாளையம் பகுதி தி.மு.க. சார்பில், பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனையை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
குடிநீர் வினியோகம்
சென்னை, கோவைக்கு இணையாக ஈரோடு மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். பழுதடைந்துள்ள ரோடுகள் அனைத்தும் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக சீரமைக்கப்படும். ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.திருமகன் ஈவெரா இந்த தொகுதியில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும். மகன் விட்டு சென்ற பணியை தொடர்வதற்காக அவருடைய தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.